Posts

உங்கள் வாழ்வு உங்களுக்கானதாக இருக்கட்டும்..

 #உங்கள்_வாழ்வு - #உங்களுக்கானதாக_இருக்கட்டும்..!! நன்கு சம்பாதித்து , சுவையான உணவுகளை உண்டு , தனக்கு கிடைத்த பாக்கியங்களை அனுபவித்து வாழாமல் , நம்மைப் பற்றி புறம் பேசுகிறார்கள் எனில் , அவர்களை விட பாவப்பட்டவர்கள் யாரும் இல்லை...!! அவர்களின் இத்தகைய செயலை அறிந்தவுடன், நாமும் அவர்களைப் பற்றி கொதித்து அவர்களை தாக்கிக் கொண்டு இருக்கிறோம் என்றால், நமக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை..!! நம் பயணத்தை யார் ஒருவரின் அனாவசிய நடவடிக்கைக்காகவும், மடைமாற்றிக்கொண்டு இருக்க வேண்டாம்...!! அவர்கள் வெறுப்புகளை கக்கட்டும்... இழிவு படுத்தட்டும்.. தரக்குறைவாக நம்மை விமர்சிக்கட்டும்... நம் தகுதியை மற்றவர்களின் இழி செயலுக்காகவெல்லாம் நிரூபிக்க அவசியமில்லை..!! நம் மதிப்பு யார் ஒருவரை சார்ந்தும் இருக்கக்கூடாது..!!  அது நம்மிடத்திலே இருக்க வேண்டும்.!! அடுத்தவர்களின் மதிப்பீடை நமக்கானவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள்..!! அப்படியே அதைப்பற்றி வினாவினாலும்  அதை தெளிவுப்படுத்திவிட்டு நகர்வோம்..  அதை விடுத்து, என்னைப் பற்றி அவர் தவறாக பேசிவிட்டால், என்னை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் ? என் மதிப்பு என்ன ஆகும

அடுத்தவர்களால் காயம் - நம்மை நாமே தண்டித்துக்கொள்ளுதல் நியாயமா

 மற்றவர்களால் ஏற்படும் காயங்களுக்கு ,நம்மை நாமே தண்டித்துக் கொள்ளுதல் நியாயமானதா..? நம் வாழ்வில் நம்மைச்சுற்றி தரக்குறைவான விமர்சனங்கள் , இழிவான பார்வைகள் , மட்டகரமான அவதூறுகள், ஏமாற்றங்கள், வீண் பழிகள், துரோகங்கள், நம் ஒழுக்கத்தை சந்தேகப்படுதல், etc என வந்துக்கொண்டு இருக்கும்..!! வெளியே அனைத்தையும் எதிர்கொள்வது போன்றும், கடப்பது போன்றும் , கண்டுகொள்ளாதது போன்றும் நாம் காட்டிக்கொண்டாலும், ஏதோ ஒரு தருணத்தில் இவை அத்தனையும் நம் மனதை ஆட்டிப்படைக்கும்... வேதனை அதிகரிக்கும் போது, இவ்வாழ்க்கை மீது வெறுப்பும் , விரக்தியும் ஏற்பட்டு இதோடு முடித்துக்கொள்ள தோன்றும்..!! அதாவது அந்த உச்ச எண்ணத்தை தொட்டுவிட்டு, அதோடு வருபவர்களும் இருக்கிறார்கள்.. சிலர் வேகத்தில் தூக்க மாத்திரை விழுங்குதல் , கைகளை வெட்டிக்கொள்ளுதல் என தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்கின்றனர்..!! ஒன்றை மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன்..!! (இது என் உணர்தல்)  மரணத்தின் சுவையை அறிய ஆவல் கொள்ளாதீர்கள்... நம் ஆன்மாவே தன் காலத்தவனை முடிந்து வெளியேறுவது என்பது, சாதாரண மற்றும் இயல்பான நிகழ்வாக அமைந்துவிடும்..!! ஆனால் நாமே ஆன்மாவை வெளியேற்ற

அந்த ஒருவரை நினைத்து வேதனை

 ஒருவரை எதிர்பார்த்தே இருப்பவர்களுக்காக...!! ஏமாற்றம் எனக்கொன்றும் புதிதல்ல..!! ஆனாலும் என் இத்தனை வருட வாழ்வில் கடந்த சில காலமாக மட்டுமே ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடிவதில்லை..!! ஆம் .. நீ அறிவாயா...? உன் வருகையை எதிர்பார்த்தே கனவு காண்கிறேன்.. மெய் மறக்கிறேன்..!! பிறகு இவை என் கற்பனை மட்டும் தான் என்றான பின்பு, அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்ணீர் வடிக்கிறேன்..!! என் வாழ்வை மற்றவர்கள் மெச்சி பேசினாலும், நீ இல்லா இந்த வாழ்வை வாழவே பிடிக்கவில்லை என்பதை அவ்வப்போது உணர்கிறேன்..!! அதே சமயத்தில் நீ இல்லாமலே இந்த வாழ்வு முற்றுபெற்றுவிடுமோ  என உயிரே  வெளியேறும் அளவுக்கு ஏங்கியும் தவிக்கிறேன்..!! எவ்வளவோ நம்பிக்கைகள் , எத்தனையோ சமாதானங்கள் என் செவிகளுக்கு வந்தாலும் , அதை ஏற்கும் மனநிலையில் நான் இல்லை..!! உன் வருகையை எதிர்பார்த்தே ,என் உயிர் ஏங்குவதை ஒருவரும் அறியார்..!! அந்த வேதனைகளை யாரிடம் பகிர்வது, பகிர்ந்தாலும் என் வேதனையை யாராலும் உணரத்தான் முடியுமா..? அப்படியே உணர்ந்தாலும் என் வேதனையை  ஒப்படைக்கத்தான் இயலுமா..?  என் மனதில் உள்ள நம்பிக்கைக்கும், ஏமாற்றத்திற்கும் நடுவே சிக்கி சீரழிகிறேன்....

கற்பு - தேவையற்ற வார்த்தை

 #கற்பு -சில நாட்களாக என் மனதில் இதை பற்றி பதிவிட தோன்றிக்கொண்டே இருக்கிறது..!!  "கற்பு " என்ற ஒன்றை வைத்து தான் எத்தனையோ கட்டுப்பாடுகள்.. சிலவை நியாயமானது என  வைத்துக்கொண்டாலும், சில அனாவசியமான கட்டுப்பாடுகளும் இருக்கத்தான் செய்கிறது .. !! அதை தகர்க்கிறேன் என்ற பெயரில் தான் எத்தனையோ வரம்பு மீறல்களும் நடைபெறுகிறது  ..!!  நம் கற்பை பற்றி அவர் பேசிவிட்டால் என்ன செய்வது, ஊர் பேசிவிட்டால் என்ன செய்வது.. நம் கற்பை நம்மை சார்ந்தவர்கள் சந்தேகம் கொண்டுவிட்டால் என்ன செய்வது..? அய்யஹோ...    இப்படியாக இந்த வார்த்தை தன் மகள், மனைவி, சகோதரி என ஒவ்வொருவருக்காவும் மறைமுகமாக மனதில் பதிய வைக்கப்படுகிறது..!! தெரிந்தோ தெரியாமலோ வாழ்வின் ஓரிரு தருணங்களில் நிகழ்ந்த நிகழ்விற்காக , வாழ்வை அழித்துக்கொள்ளுதல் நியாயமாக எனக்கு படவில்லை.!! இவற்றை ஏற்றுக்கொள்ள மனமிருப்பவர் ஏற்றுக்கொள்ளட்டுமே... காலம் மாறிக்கொண்டு இருக்கிறது..!! பெண்ணின் கற்பு என்பதை அந்த கண்ணித்திரை க்கு பின்னால் மறைத்து வைத்த சமூகம், ஆணின் கற்பை எங்கே வைத்துள்ளது என்பதை தான் கண்டறிந்து கொண்டு வருகிறேன்..!! அந்த கற்பை சந்தேகம் கொண்டு விட

அப்பா மகள் பாசம்

 #அப்பா -#மகள் இருவக்குமான நெருக்கத்தையும் , பாசப்போராட்டத்தையும் உணர்ந்து கொண்டது என் மனைவியின் மூலமாக தான்..!! பெரும்பாலும் மகள்கள். அதாவது பெண்கள்  சூழ்நிலைகளை எதிர்கொண்டு வாழப்பழகி கொள்கின்றனர்..! ஆனால் அப்பாக்கள் தான் அத்தகைய வெற்றிடத்தை நிரப்ப இயலாமல் தவித்துக்கொண்டு இருக்கின்றனர்..!! வேறோடு பிடுங்கிய செடி, காலப்போக்கில் வேறொரு இடத்தில் சௌகரியமாக வாழ்ந்தாலும், வளர்த்த நிலம், தன் மகளின் நிலையை எண்ணி கலங்காமல் ஒருநாளும் இருக்காது..!!  திருமணமான புதிதில் ," என் அப்பாவை போல் வருமா , என் அப்பா இப்படி செய்வார் , அப்படி பாத்துப்பார், என் அப்பாவாக இருந்திருந்தால் இந்நேரம் நடப்பதே வேற"... என பல்வேறு விதமான வார்த்தைகளை கேட்டு இருக்கிறேன்..!! அந்த வார்த்தைகள் அப்போது கசந்தது..!! ஆனால் தற்போது என் மனம் அந்த மனிதர் மேல் இனம் புரியாத மரியாதையை நிரப்பி உள்ளது..!! காரணம் , என் மனைவியின் அளவீடே அவரின் அப்பா தான்... உதாரணமாக , என்னை எந்த அளவுக்கு பிடிக்கும் என அவரே என்னிடம்  பல தருணங்களில் கூறிய வார்த்தைகளை கூறுகிறேன்..,!! " என்னோட அப்பா அளவுக்கு லாம் யாரும் வர முடியாது..  என் அப்பா

என் பலவீனம் - அடுத்தவர்களை மாற்றுதல் அனாவசியம்

 நமக்குள் தோன்றும் பலவிதமான எண்ணங்களுக்கு ஏற்ப ஒருவரிடம் மாற்றத்தை விரும்புவதும், ஆறுதலை எதிர்பார்ப்பதும், ஒன்றை திணிப்பதும், அவர்களை கட்டாயப்படுத்துவதும் தவறு..!! நமக்குள் உருவாகும் உணர்வுகளை நியாயமாக அவர்களிடம் வெளிப்படுத்தலாம் .!! அவர்களை வேதனைப்படுத்தக்கூடாது..!! நான் "காயப்படுகிறேன்" ,என இன்னொருவரை மாற்றமடையச் சொல்வதை விட , நம்மை பலப்படுத்திக்கொள்ளுதல் எளிமையானது... மேன்மையானது..!! என் பலவீனத்திற்கும், எதிர்மறையான எண்ணங்களுக்கும் அடுத்தவர்களை மாற்றமடையச்சொல்வதை விட, நான் தெளிவு பெறுதல் அனைவருக்கும் நன்மையை தரும்..!! நன்றி..!! #முபா..!!

பாலியல் குற்றம் - தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ளுங்கள்

 பாலியல் குற்றம் - தன்னைத்தானே சீர்படுத்திக்கொள்ளுங்கள் .!! அரசாங்கத்தின் மூலம் நீதியை நாம் வாங்க இயலாது..!! பாதிக்கப்பட்டவர்களை பற்றிய தகவல்கள் அதிகம் பரப்பப்படும்... தவறு செய்தவனை பற்றிய எந்த செய்தியும் வராது...!! அப்படியே வந்தாலும் , அவன் பெரும்பாலும் தப்பித்துக்கொள்கிறான்..!! சிலரை நீதிமன்றம் தண்டித்தாலும், அவன் உண்மைக் குற்றவாளியா, அப்ராணியா என நமக்கு தெரிவதில்லை..!!  இத்தனையும் கடந்து, சரியான நபரை கண்டறிந்து, அந்த நபருக்கு தகுந்த தண்டனை வழங்கினாலும் , இனி இந்த தவறுகள் நடக்காது என யார் ஒருவரும் உறுதி தர இயலாது..!! எனக்கு தெரிந்த சிலவற்றை பகிர்கிறேன்..!! ஆண்கள் பெண்களின் உடையை குறை கூறுவதும், பெண்கள் ஆண்களாகிய நீங்கள் திருந்துங்கள் என கூறுவதும் காலங்காலமாக வாக்குவாதமாக நடந்து கொண்டே இருக்கிறது..!! இருதரப்பினரும் வாதங்கள் செய்து கொண்டே இருக்கிறார்களே தவிர, அவரவர் புரிந்தது மட்டுமே சரி, எதிர்தரப்பினர் மீது தான் தவறு என்றே முத்திரை குத்தி வருகின்றனர்..!! இணைந்து தடுக்க வேண்டிய பணியை, ஒருவரை ஒருவர் குறை கூறி, பிரிந்து நின்று விமர்சிப்பதோடே  நிறுத்திக்கொள்கிறோம்..  நான் ஒன்றும் புதிய கர